PL_32 நம்பிடுவேன் நான் நம்பிடுவேன் இயேசுவை நம்பிடுவேன் ஜீவக்காலம் முழுவதும் இயேசுவை நம்பிடுவேன் 1.சாபங்கள் எல்லாமே நீக்கிடுவார் ஆசீர்வாதமாக மாற்றிடுவார் என் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் ஆற்றுவார் தேற்றுவார் அரவணைப்பார் 2.எனக்கு முன்பாக சென்றிடுவார் கோணல்கள் நேராக மாற்றிடுவார் தடை செய்யும் கதவெல்லாம் உடைத்திடுவார் பொக்கிஷம் எல்லாமே தந்திடுவார் 3.காலங்கள் மனிதர்கள் மாறினாலும் மாறாத இயேசு ராஜா எனக்கு வேண்டும் அவர் தந்த வாக்குகள் யாவையுமே தம் கரத்தால் தவறாமல் நிறைவேற்றுவார் - - - - - - - - - - - - - -