PL_46 ஏல்-எஷுரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே ஏல்-எஷுரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1.பெலவானாய் என்னை மாற்றினவர் நீதிமான் என்று அழைக்கின்றவர் எனக்காக யுத்தங்கள் செய்கின்றவர் முன்னின்று சத்துருவை துரத்துபவர் இஸ்ரவேலின் மகிமை அவர் - ஏல்-எஷுரன் 2.பயப்படாதே என்றவரே நான் உன்னை மறவேன் என்றவரே சந்ததி மேல் உம் ஆவியையும் சந்தானத்தின் மேல் ஆசீயையும் ஊற்றி ஊற்றி நிறைப்பவரே - ஏல்-எஷுரன் 3.நீ என் தாசன் என்றவரே நான் உன்னை தெரிந்தேன் என்றவரே பாவங்கள் யாவும் மன்னித்தீரே சாபங்கள் யாவையும் நீக்கினீரே மீட்டுக் கொண்டேன் என்றவரே - ஏல்-எஷுரன் - - - - - - - - - - -