PL_47 கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் நீ கலங்காதே மனமே 1.கையிடும் வேலையில் ஆசீர்வாதமும் களங்களில் நிரம்பிடும் தானியமும் நிறைவான நன்மை உண்டாக கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 2.சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது கர்த்தரே யுத்தத்தைச் செய்திடுவார் வெற்றி மேல் வெற்றியை உனக்குத் தந்து கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 3.உன்னை அவர் தனக்காகத் தெரிந்து கொண்டார் தன் பெயரை உனக்காக வழங்கினாரே சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 4.உன் தேசம் முழுவதும் மழை பொழியும் உனக்காகப் பொக்கிஷத்தைத் திறந்திடுவார் பிறருக்கு நீயும் கடன் கொடுக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் - - - - - - - - - -