TA_23 கண்களை ஏறெடுப்பேன் - மாமேரு நேராய் என் கண்களை ஏறெடுப்பேன். விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து எண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் - கண் 1.காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர் காலைத் தள்ளாட வொட்டார், வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர் காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் - கண் 2.பக்தர் நிழல் அவரே - எனை ஆதரித்திடும் பக்கநிழல் அவரே, எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது அக்கோலம் கொண்டோனை அக்காவல் புரியவே - கண் 3.எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே எல்லாத் தீமைகட்கும் பொல்லா உலகினில் போக்குவரத்தையும் நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் - கண் - - - - - - - - - -