TA_30 குதுகலம் நிறைந்த நந்நாள் நடுவானில் மின்னிடுதே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம் 1.தளகர்த்தனாம் இயேசு நின்று, யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புதுபெலன் அடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம். 2.புவி மீதினில் சரீர மீட்பு, என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியைச் சேர்த்திடவே 3.ஜெப விழிப்புடன் வாஞ்சையாக, அவர் வருகையை எதிர்நோக்கி நவ எருசலேமாய் தூய லங்கிர்தமாய், நாம் ஆயத்தமாகிடுவோம். 4.ஜீவ ஒளி வீசும் கற்களாக சீயோன் நகர்தனிலே சேர்க்க அருள் சுரந்திருந்தார் நாமும் வரைந்திருந்தார், அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் 5.தேவ தூதர்கள் கானமுடன் ஆரவார தொனி கேட்கும் அவர் கிருபையினால் மறுரூபமாக நம்மை இனிதுடன் சேர்த்திடுவார். - - - - - - - - - -