TA_46 தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே இப்புது மனைதனில் இறையன்பின் பிரசன்னம் எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி - தோத்திரம் 1.கையின் பிரயாசமதை - தயவாய், சுபமாய், நிறைவாய் கனிந்திடச் செய்தவரை கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி - தோத்திரம் 2.இல்லத்தின் ஒளி அவராய் - இருந்து, தொடர்ந்து, நிறைந்த இன்பங்கள் நல்கிடவே இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள் இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி - தோத்திரம் - - - - - - - - - -