TA_67 அதிசயமானவரே அகிலத்தை படைத்தவரே ஆதியே அந்தமே, அற்புதர் இயேசுவே நீர் பரிசுத்தர் நீர் நல்லவர் நீர் வல்லவர் நீர் உன்னதர் ....ஆ....ஆ 1.வானம் பூமி படைத்த சர்வ வல்ல தேவனே ஆத்துமாவின் நேசரே உம்மை ஆராதனை செய்கின்றோம் - நீர் பரிசுத்தர் 2.நேற்றும் இன்றும் என்றும், மாறா ஜீவ தேவனே ஆவியான தேவனே உம்மை ஆராதனை செய்கின்றோம் - நீர் பரிசுத்தர் 3.சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணும் தேவனே சாவாமை உள்ளவரே உம்மை ஆராதனை செய்கின்றோம் - நீர் பரிசுத்தர் 4.நித்தியானந்தமுள்ள ஏக சக்ராதிபதியே மகாராஜனே உம்மை ஆராதனை செய்கின்றோம் - நீர் பரிசுத்தர் 5.இராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தரே தேவாதி தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் - நீர் பரிசுத்தர் - - - - - - - - - -