TA_68 அருள்நாதர் நாமமதில் ஒரு மனமாய் உருகி தொழுகின்ற நேரம் எல்லாம் எழுந்திடுவார் நடுவில் - நாம்(2) 1.இதயம் நொறுங்கினோரின் ஆதரவும் அவரே(2) கதறல்கள் கேட்டிடுவார் பதறாமல் அணைத்திடுவார் - அருள்நாதர் 2.நோயினால் நொந்தவரை தாயன்பால் அணைத்தவரே(2) பரிகாரி நானே என்பார் பட்சமாய் தாங்கிடுவார் - அருள்நாதர் 3.மாயையில் மயங்கினோரை தயைதந்து மாற்றுவாரே(2) தூய ஆவி ஈந்திடுவார் தூய்மையாய் மாற்றிடுவார் - அருள்நாதர் - - - - - - - - - -