TA_81 இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் இன்ப நாமம் 1.பாவத்தை போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் - இயேசு 2.பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம் - இயேசு 3.வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் - இயேசு 4.நேற்றும் இன்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நாமம் - இயேசு 5.முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் - இயேசு 6.சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் சாபப் பிசாசை துரத்திடும் நாமம் - இயேசு - - - - - - - - - -