TA_82 இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே வானம் பூமிதனில் மகிமை யோடிரங்கும் உன்னதர் நாமமே அல்லேலூயா-(4) அல்லேலூயா-(4) 1.மாந்தர் போற்றும் நாமம் - விண் தூதர் வாழ்த்தும் நாமம் பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம் 2.பாவம் போக்கும் நாமம் - தூய வாழ்வளிக்கும் நாமம் நித்திய ஜீவனருளும் ஈடில்லாத நாமம் 3.பேய் நடுங்கும் நாமம் - கடும் நோய் அகற்றும் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத நாமம் 4.இனிமை தங்கும் நாமம் - தீய இன்னல் மாற்றும் நாமம் இருளின் பயங்கள் நீக்கும் ஈடில்லாத நாமம் 5.சாவை வென்ற நாமம் - பாவ சாபம் போக்கும் நாமம் சர்வ வல்ல நாமம் எங்கள் இயேசுவின் நாமம் - - - - - - - - -