TC_02 அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரய்யா காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது 1.அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே -அன்பு 2.நிலையில்லாத உலகத்தில் அலைந்தேனய்யா நிகரில்லாத இயேசுவே அணைத்துக் கொண்டீரே -அன்பு 3.தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்து கொண்டீரே தாயைப்போல ஆற்றித் தேற்றி நடத்தி வந்தீரே -அன்பு 4.நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீரோடே நன்றி சொல்லி துதிக்கின்றேனய்யா -அன்பு 5.கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே -அன்பு - - - - - - - - - -