TC_10 அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா உம்மால் எல்லாம் கூடும் 1.என் ஞானம் கல்வி செல்வங்கள் யாவும் ஒன்றுமில்லை குப்பை என்று எண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே 2.அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே - - - - - - - - - -