TC_27 உலகத்தில் இருப்பவனிலும் உங்களில் இருப்பவர் பெரியவர் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர் என்றுமே 1.தண்ணீரைக் கடந்திடும் போதும் உன்மேல் அலைகள் புரளுவதில்லை அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாது அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் 2.உன் பக்கம் ஆயிரம் பேரும் உன்மேல் விழுந்தாலும் தீங்கொன்றுமில்லை கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே ஜெயதொனியோடே முன்னே செல்வாய் 3.என்றென்றும் கர்த்தரின் நாமம் துணையே என்று அறிந்துணர்வாயே உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார் 4.எந்நாளும் இயேசுவை நம்பு குறைவேயில்லை ஜீவியமதிலே பசுமையின் ஜீவியம் உந்தன் பங்காகும் கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம் 5.தேவாதி தேவனாம் இயேசு உன்னைக் காத்திடும் தெய்வமும் இவரே அமர்ந்திருந்து தேவனின் செயலை உணர்வாயே உந்தனின் அடைக்கலம் கோட்டையும் இவரே - - - - - - - - -