TC_35 1.எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க இயேசுவை பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே நேசிக்கின்றேன் அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன் அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தரைக் கொண்டாடுவேன் 2.சென்ற காலம் முழவதும் காத்தாரே ஓர் சேதமும் அணுகாமல் சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்றும் சுகபெலன் அளித்தாரே -அல்லேலூயா 3.சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை சிருஷ்டிகர் மறைத்தாரே கடுங்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல் கிருபையும் பொழிந்தாரே -அல்லேலூயா 4.பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம் தஞ்சமே ஆனாரே அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும் அடைக்கலம் அளித்தாரே -அல்லேலூயா 5.களிப்போடு விரைந்தெம்மை சேர்த்திட என் கர்த்தரே வருவாரே ஆவலோடு நாமும் வசனத்தை நோக்கி அனுதினம் காத்திருப்போம் -அல்லேலூயா - - - - - - - - - -