TC_49 கிருபையிதே தேவக் கிருபையிதே தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1.ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவியப்பாதையிலே - இயேசு பரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே 2.வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் 3.அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் 4.நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திருப்போம் அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் 5.ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கிறாரே வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் - - - - - - - - - -