TC_65 நான் பாவிதான் - ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் வா என்று என்னை அழைத்தீர் என் மீட்பரே வந்தேன் 1.நான் பாவிதான் - என் நெஞ்சிலே கறை பிடித்துக் கெட்டேனே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வந்தேன் 2.நான் பாவிதான் - மா பயத்தால் திகைத்து, பாவ பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வந்தேன் 3.நான் பாவிதான் - மெய்யாயினும் சீர் நேர்மை செல்வம் மோட்சமும் அடைவதற்கு உம்மிடம் என் மீட்பரே வந்தேன் 4.நான் பாவிதான் - இரங்குவீர் அணைத்து, காத்து, ரட்சிப்பீர் அருளாம் செல்வம் அளிப்பீர் என் மீட்பரே வந்தேன் 5.நான் பாவிதான் - அன்பாக நீர் நீங்காத் தடைகள் நீக்கினீர் உமக்குச் சொந்தம் ஆக்கினீர் என் மீட்பரே வந்தேன் - - - - - - - - - கீ.கீ-446 பா-292 S.S.-473 Just as I am without one Plea (Rockingham)