TC_75 பாதம் ஒன்றே வேண்டும் .. இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உம் 1.நாதனே, துங்க மெய் - வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ்செய்யும் 2.சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த - உம் 3.வீசும் கமழ் கொண்ட - வாசனைத் தைலத்தை ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த - பொற் 4.போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும் நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த - நற் 5.நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற - வல் ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த - உம் 6.பாதம் அடைந்தவர்க் - காதவராய் பிர சாதம் அருள் யேசு - நாதனே, என்றும் - உன் - - - - - - - - - - கீ.கீ-497 கி.கீ-201