TC_82 1.மாறிடா எம் மா நேசரே - ஆ மாறாதவர் அன்பெந் நாளுமே கல்வாரி சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே - ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதின் ஆழம் அறியலாகுமோ இதற்கிணை யேதும் வேறில்லையே இணை எதும் வேறில்லையே 2.பாவியாக இருக்கையிலே - அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுன்னைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே. - ஆ! இயேசு 3.உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே. - ஆ! இயேசு 4.ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க - ஆ! இயேசு 5.நியாய விதி தினமதிலே - நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே - ஆ! இயேசு 6.பயமதை நீக்கிடும் - யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே - ஆ! இயேசு - - - - - - - -