TC_83 யேகோவா நிசி யேகோவா நிசி(2) யேகோவா நிசி யேகோவா நிசியை பேற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக்கொடியே அல்லேலூயா(2) 1.வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே! மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவா? மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா? யூத சிங்கம் யுத்த சிங்கமே!(2) 2.கர்த்தர் துணைநின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார் கர்த்தர் வல்ல யுத்த வீரரே(2) 3.சத்ரு வெள்ளம் போல ஏறி வருகிறான் சத்ய ஆவி வேகம் கொடியை ஏற்றுவார் கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமோ? கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா? கர்த்தர் நாமம் வல்ல கோட்டையே(2) 4.ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வோமே ஆயுதங்களணிந்து களம் செல்வோமே ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே ஆவிகளின் சேனைகளை வெல்வோமே கொடிகள் ஏந்தும் படைகளல்லவோ!(2) 5.நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே பட்டயமோ புயபலமோ தேவையா? பரம பிதா ஆவி நம்மில் இல்லையா? ஜீவ தேவ சேனையல்லவோ(2) 6.முடிந்ததென்று முழங்கி நிற்கும் வீரனே முற்றும் அவனை முறியடித்த தீரனே சிலுவையில் சிரம் நசித்த சீலனே சிலுவைக் கொடியை ஏற்றும் தேவபாலனே வெற்றி வாகை சூட்டிப் பணிகிறோம்(2) 7.அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே! அல்லேலூயா இயேசு ராஜா வருகவே! அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே! அல்லேலூயா தேவ படை வெல்கவே! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்கவே!(2) - - - - - - - - - -