ZC_04 ஆர்‌ இவர்‌ ஆராரோ - இந்த - அவனியோர்‌ மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய்‌ உதித்த இவ்வற்புதப்‌ பாலகனார்‌? 1. பாருருவாகுமுன்னே - இருந்த பரப்பொருள்‌ தானிவரோ? சீருடன்‌ புவி, வான்‌ , அவை பொருள்‌ யாவையுஞ்‌ சிருட்டித்த மாவலரோ? -ஆர்‌ 2 மேசியா இவர்தானோ? - நம்மை மேய்த்திடும்‌ நரர்கோனோ? ஆசையாய்‌ மனிதருக்காய்‌ மரித்திடும்‌ அதி அன்புள்ள மனசானோ? -ஆர்‌ 3. தித்திக்குந்‌ தீங்கனியோ? - நமது தேவனின்‌ கண்மணியோ? மெத்தவே உலகிறுள்‌ நீக்கிடும்‌ அதிசய மேவிய விண்ணொளியோ? -ஆர்‌ 4. பட்டத்துத்‌ துரைமகனோ? - நம்மைப்‌ பண்புடன்‌ ஆள்பவனோ? கட்டளை மீறிடும்‌ யாவர்க்கும்‌ மன்னிப்புக்‌ காட்டிடுந்‌ தாயகனோ? -ஆர்‌ 5. ஜீவனின்‌ அப்பமோதான்‌? - தாகம்‌ தீர்த்திடும்‌ பானமோதாள்‌? ஆவலாய்‌ ஏழைகள்‌ அடைந்திடும்‌ அடைக்கல மானவர்‌ இவர்தானோ? -ஆர்‌ - - - - - - - - - -