ZC_07 பிறந்தார்‌, பிறந்தார்‌ வானவர்‌ புவி மானிடர்‌ புகழ்‌ பாடிட பிறந்தார்‌ மாட்டூத்‌ தொழுவம்‌ தெரிந்தெடுத்தார்‌ மாதேவ தேவனே மேன்மை வெறுத்தார்‌ தாழ்மை தரித்தார்‌ மா தியாகியாய்‌ வளர்ந்தார்‌ - பிறந்தார்‌ பாவ உலக மானிடர்‌ மேல்‌ பாசம்‌ அடைந்தவரே மனக்காரிருளை எம்மில்‌ நீக்கிடும்‌ மெய்‌ மாஜோதியாய்‌ திகழ்ந்தார்‌ - பிறந்தார்‌ பொறுமை, தாழ்மை, அன்புருக்கம்‌ பெருந்தன்மை உள்ளவரே மரணம்‌ வரையும்‌ தன்னை தாழ்த்தினதால்‌ மேலான நாமம்‌ பெற்றார்‌ - பிறந்தார்‌ கந்தைத்‌ துணியோ கர்த்தருக்கே கடும்‌ ஏழ்மைக்‌ கோலமதோ விலையேறப்‌ பெற்ற உடை அலங்கரிப்பும்‌ வீண்‌ ஆசையும்‌ நமக்கேன- பிறந்தார்‌ குருவைத்‌ தொடரும்‌ சீஷர்களும்‌ குருபோல மாறிடூவார்‌ அவர்‌ நாமம்‌ தரித்தவர்‌ யாவருமே அவர்‌ பாதையில்‌ நடப்போம்‌ - பிறந்தார்‌ இயேசு பிறந்தார்‌ உள்ளமதில்‌ இதை எங்கும்‌ சாற்றிடுவோம்‌ புசிப்பும்‌ குடிப்பும்‌ தேவ ராஜ்யமல்ல பரன்‌ ஆவியில்‌ மகிழ்வோம்‌ - பிறந்தார்‌ - - - - - - - - - -