ZC_08 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர் ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க அவர் திரு நாமமே விளங்க – (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே 2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள் மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள் உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி 3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள் வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள் இயேசு என்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள் ராஜாதி ராஜானின் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் – ராஜாதி 4. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள் மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள் உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் – ராஜாதி