ZC_09 1.ராஜன்‌ தாவீதூரிலுள்ள மாட்டுக்‌ கொட்டில்‌ ஒன்றிலே கன்னி மாதா பாலன்‌ தன்னை முன்னணையில்‌ வைத்தாரே, மாதா, மரியம்மாள்‌ தான்‌; பாலன்‌, இயேசு கிறிஸ்துதான்‌. 2.வானம்‌ விட்டுப்‌ பூமி வந்தார்‌ மா கர்த்தாதி கர்த்தரே; அவர்‌ வீடோ மாட்டுக்‌ கொட்டில்‌, தொட்டிலோ முன்னணையே, ஏழையோடு ஏழையாய்‌ வாழ்ந்தார்‌ பூவில்‌ தாழ்மையாய்‌ 3.ஏழையான மாதாவுக்கு, பாலனாய்க்‌ கீழ்ப்படிந்தார்‌; பாலிய பருவம்‌ எல்லாம்‌ அன்பாய்‌ பெற்றோர்க்கு அடங்கினார்‌, அவர்போல்‌ கீழ்ப்படிவோம்‌, சாந்தத்தோடு நடப்போம்‌. 4.பாலர்க்கேற்ற பாதை காட்ட பாலனாக வளர்ந்தார்‌; பலவீன மாந்தன்‌ போல துன்பம்‌ துக்கம்‌ சகித்தார்‌ இன்ப துன்ப நாளிலும்‌ துணை செய்வார்‌ நமக்கும்‌. - - - - - - - - - - -