ZC_10 1. நள்ளிராவினிலே ஆயர்கள் காத்தனர் தங்களின் மந்தையை கண்டனர் பேரொளி விண்ணிலே கொண்டனர் தம்மிலே அச்சமே அச்சமே நீக்குவீர் என்றதோர் தூதனின் வாய்மொழி ஆனந்தம் தந்திடும் செய்தியை கூறவே வந்தேன் நான் 2. தாவீதின் ஊரிலோர் புல்லணை தன்னிலே காணுவீர் பாலனை தேவனின் மைந்தனை காணவே அடையாளம் இது என்றதால் 3. செய்தியை கேட்ட நல் ஆயர்கள் காணிக்கை கைகளில் கொண்டுமே சென்றனர் பாலனைக் காணவே கண்டனர் பணிந்தனர் பாலனை - - - - - - - - - - -