ZC_13 அரசனைக்‌ காணமலிருப்போமோ? - நமது ஆயுளை வீணாகக்‌ கழிப்போமோ? - அரசனை பரம்பரை ஞானத்தைப்‌ பழிப்போமோ? - யூதர்‌ பாடனுபவங்களை ஒழிப்போமோ? - யூத 1. யாக்கோபிலோர்‌ வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்‌ ராஜ செங்கோலெங்கும்‌ கதிக்குமென்றே ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்‌ தீர்க்கன்‌ மொழி பொய்யாத பாக்கியமே! - யூத -அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்‌! - மேற்குத்‌ திசை வழி காட்டிமுள்‌ செல்லுது பார்‌! பூசனைக்காண நன்கொடைகள்‌ கொண்டே -அவர்‌ பொன்னடி வணங்குவோம்‌ நடவுமின்றே! - யூத -அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார்‌! - அதன்‌ அழகு மனமுங்‌ கண்ணும்‌ கவர்ந்தது பார்‌! 'இளவர சங்கிருக்கும்‌ நிச்சயம்‌ பார்‌! - நாம்‌. எடுத்த கருமம்‌ சித்தியாகிடும்‌ பார்‌! - யூத -அரசனை 4. அரமனையில்‌ அவரைக்‌ காணோயே! - அதை அகன்று தென்மார்க்கமாய்த்‌ திரும்புவோமே! மறைந்த உடு அதோ பார்‌! திரும்பினதே பெத்லேம்‌ வாசலில்‌ நமைக்‌ கொண்டு சேர்க்குது பார்‌! - யூத -அரசனை 5. பொன்‌ தூபவர்க்கம்‌ வெள்ளைப்‌ போஎமிட்டே, - ராயர்‌ பொற்கழல்‌ அர்ச்சனை புரிவோமே! வன்கண்ணன்‌ ஏரோதைப்‌ பாராமல்‌, - தேவ வாக்கினால்‌ திரும்பினோம்‌ சோராமல்‌ - யூத -அரசனை - - - - - - - - - -