ZC_15 1. இம்மானுவேலே வாரும்‌, வாருமே, மெய்‌ இஸ்ரவேலச்‌ சிறை மீளுமே; மா தெய்வ மைந்தன்‌ தோன்றும்‌ வரைக்கும்‌ உள்‌ ஜனம்‌ பாரில்‌ ஏங்கித்தவிக்கும்‌ மகிழ்‌! மகிழ்‌! சீயோனின்‌ சபையே; இம்மானுவேலின்‌ நாள்‌ சமீபமே. 2. ஈசாயின்‌ வேர்த்துளிரே, வாருமே; பிசாசின்‌ வல்ல கோஷ்டம்‌ நீக்குமே;, பாதாள ஆழம்‌ நின்று ரட்சியும்‌, வெம்‌ சாவின்மேல்‌ பேர்‌ வெற்றி அளியும்‌. 3. அருணோதயமே, ஆ! வாருமே, வந்தெங்கள்‌ நெஞ்சை ஆற்றித்‌ தேற்றுமே; மந்தார ராவின்‌ மேகம்‌ நீக்கிடும்‌, இருண்ட சாவின்‌ நிழல்‌ ஓட்டிடும்‌. 4. தாவீதின்‌ திறவுகோலே, வாருமே, விண்‌ வாசலைத்‌ திறந்து தாருமே! ஒடுக்கமாம்‌ நல்‌ வழி காத்திடும்‌, 'விசாலமாம்‌ துர்ப்பாதை தூர்த்திடும்‌. 5. மாவல்ல ஆண்டவா, வந்தருளும்‌; முற்காலம்‌ சீனாய்‌ மலைமீதிலும்‌ எக்காளம்‌ மின்னலோடு தேவரீர்‌ பிரமாணம்‌ இஸ்ரவேலுக்களித்தீர்‌. - - - - - - - - - - -