ZC_18 1. பெத்தலெகேம்‌ ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன்‌ இயேசு பாலனுக்கு துத்தியங்கள்‌ பாடி. பக்தியுடன்‌ இத்தினம்‌ வா ஓடி - பெத்தலெகேம்‌. 2. காலம்‌ நிறைவேறின போதிஸ்திரியின்‌ வித்து சீலகன்னி கர்ப்பத்தில்‌ ஆவியால்‌ உற்பவித்துப்‌ பாலனான யேசுநமின்‌ சொத்து - பெத்தலெகேம்‌. 3. எல்லையில்லா ஞானபரன்‌ வெல்லை மலையோரம்‌ புல்லனையிலே பிறந்தார்‌ இல்லமெங்கும்‌ ஈரம்‌ தொல்லை மிகும்‌ அவ்விருட்டு நேரம்‌ - பெத்தலெகேம்‌. 4, வான்‌ புவி வாழ்‌ ராஜனுக்கு மாட்டகந்தான்‌ வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ ஆன பழங்‌ கந்தை என்ன பாடோ? - பெத்தலெகேம்‌. 5, அந்தரத்தில்‌ பாடுகின்றார்‌ தூதர்‌ சேனை கூடி மந்தை ஆயர்‌ ஓடுகின்றார்‌ பாடல்‌ கேட்கத்‌ தேடி இன்றிரவில்‌ என்ன இந்த மோடி. - பெத்தலெகேம்‌. 6. ஆட்டிடையர்‌ அஞ்சுகிறார்‌ அவர்‌ மகிமை கண்டு அட்டியின்றி காபிரியேல்‌ சொன்ன செய்தி கொண்டு நாட்டமுடன்‌ ரட்சகரைக்‌ கண்டு - பெத்தலெகேம்‌. 7. இந்திரியுடு கண்டரசர்‌ மூவர்‌ நடந்தாரே சந்திரத்‌ தூபம்‌ போளம்‌ வைத்துச்‌ சுதனைப்‌ பணிந்தாரே விந்தையது பார்க்கலாம்‌ வா நேரே - பெத்தலெகேம்‌. - - - - - - - - - -