ZC_25 என்ன பாக்கியம்‌, எவர்க்குண்டு இந்தச்‌ சிலாக்கியம்‌? விண்ணவரும்‌, புவிமேவும்‌ முனிவர்களும்‌ மன்னவருங்‌ காணா மகிபனை யான்‌ கண்டேன்‌; - என்ன 1. வானகந்‌ தானோ அல்லதிது வையகந்‌ தானோ? ஆனகம்‌ சென்று எழுந்த அரும்பொருள்‌ கானகந்‌ தன்னில்‌ என்‌ கையில்‌ அமர்ந்தது. - என்ன 2. போதும்‌ இவ்வாழ்வு; பரகதி போவேன்‌ இப்போது ஏதேன்‌ என்ற பரதீசும்‌ வந்திட்டது எண்ணில்லாத செல்வம்‌ என்கையில்‌ கிட்டுது. - என்ன 3. சாமியைக்‌ கண்டேன்‌ மகானந்தம்‌ சாலவுங்கொண்டேன்‌ காமரு தேங்கனி வாய்கள்‌ துடிப்பதும்‌, கண்ணும்‌ மனமும்‌ களிக்க விழிப்பதும்‌ - என்ன 4. அன்னமும்‌ நீயே கிடைத்தற்கருஞ்சொன்னமும்‌ நீயே மின்னறு மேகத்‌ திருக்கை துறந்தையோ? மேதினி தன்னை ரட்சிக்கப்‌ பிறந்தையோ? - என்ன - - - - - - - - - -