ZE_16 பாவியாகவே வாரேன்‌; பாவம்‌ போக்கும்‌ பலியாம்‌ என்‌ யேசுவே, வாரேன்‌ - பாவியாகவே வாரேன்‌. 1. பாவக்கறை போமோ என்‌ பாடால்‌? உன்‌ பாடாலன்றிப்‌ போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான்‌ -பாவி 2. நீ வா, உள்‌ பாவம்‌ என்னால்‌ நீங்கும்‌ என்று சொன்னீரே தேவா, உன்‌ வாக்கை நம்பிச்‌ சீர்‌ கேடன்‌ நீசனும்‌ நான்‌. -பாவி 3. பேய்மருள்‌ உலகுடல்‌ பேராசையால்‌ மயங்கிப்‌ போயும்‌ அவற்றோடு போரில்‌ அயர்ச்சியாய்‌ நான்‌. -பாவி 4, ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள்‌ அற்றேன்‌ தாவென்று வேண்டிய சாவில்‌ சஞ்சரித்த நான்‌. பாவி 5. துன்பங்கள்‌ நீக்கி உன்னைத்‌ தூக்கி அணைப்பேன்‌ என்றீர்‌; இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான்‌. -பாவி 6. உன்னைச்‌ சேர ஒட்டாமல்‌ ஊன்றிய தடை யாவும்‌ உன்னன்பால்‌ நீங்கி நல்‌ உயிர்‌ அடைந்தோங்கவே நான்‌. -பாவி - - - - - - - - - -