ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும் மோவாபியக் கொள்ளைக் கூட்டத்தினர் வந்து இஸ்ரவேலரின் நாட்டைத் தாக்கி சூறையாடுவது வழக்கம்.
தீர்க்கதரிசியாகிய எலிசா மரித்து ஒரு வருடம் சென்ற பின், ஜனங்களை சூறையாடி பொருட்களை எடுப்பதற்காக மீண்டும் மோவாபிய கொள்ளைக் கூட்டத்தினர் வந்தனர்.
அப்பொழுது மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்த இஸ்ரவேலர்கள் மோவாபிய கொள்ளைக் கூட்டத்தினர் வருவதைப் பார்த்தார்கள்.
உடனே அவர்கள் பயந்து, கொள்ளையர்களிடம் இருந்து தப்பி ஓடிப்போக வேண்டிய அவசரத்தில், பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசினார்கள் .
அந்த மனுஷனின் பிரேதம் எலிசாவின் எலும்புகளின் மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
மரித்து ஒரு வருடம் சென்ற பின்பும், எலிசா தீர்க்கதரிசியின் எலும்புகளில் தங்கி இருந்த உயிர்ப்பிக்கும் வல்லமை ஒரு கல்லறை அதிசயமாகவே உள்ளது.
The implied meaning was derived from these versions of the Holy Bible: OV-BSI, ERV-TA, CE-TA, WEB, NIV, AMP