பகை அவமானத்தை உருவாக்குகிறது. எப்படி? Psalms 44 : 7

ஒரு மனிதனின் இருதயத்தில் உள்ள பகையான சிந்தனை அவர்கள் விரும்பாத வெட்கப்படும் சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கி விடுகிறது.

கர்த்தருடைய நாமம் தரித்த அவருடைய பிள்ளைகளுக்கு விரோதமான பகை மற்றும் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதர்களுக்கு எதிரான பகை என்பது கர்த்தருக்கு விரோதமான பகை என்றே கருதப்படுகிறது.

சங்கீதம் 44 : 7 – நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.

கர்த்தர் தம்மை பகைக்கிறவர்களுக்கு விரோதமாக செயல்பட்டு அவர்களை வெட்கப்படுத்துகிறார் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பகையை விட்டு விலகி இரட்சிப்பின் வழியை நாடுவதே ஒரு மனிதனுக்கு நன்மையை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

– – – – – – – – – –